Monday 4 November 2013

திறமை


                            எப்பொழுதும்  சரியான முடிவு எடுப்பது கடினமானது
                 எடுத்த முடிவுகளில் சரியாக நடந்து செல்வது திறமையானது 

Sunday 3 November 2013

எதிர்த்திசை












 காதலில் தோல்வி அடைந்தவன் நண்பனுடன் குடிக்கிறான்                                         வெற்றியடைந்தவன் நட்ப்பையிழந்து  துடிக்கிறான்

Saturday 2 November 2013

துடிக்குமா வெடிக்குமா இதயம்



ஏ பெண்ணே உன் பார்வையில் எத்தனை வெப்பம்
இதற்கு திரி என்ன தேவையா பற்றவைக்க
பற்றிக் கொண்ட என் இதயம் வெடிக்குமா?
இல்லை உன் மடியில் காலமும் துடிக்குமா?

Friday 1 November 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

           

           
குடும்பங்கள் கூட்டாகி குதுகலத்துடன்
வடை முறுக்கை நொறுக்கி விட்டு
தளிர் வாழை  இலை விரித்து
கார சாரமாக  குறும்பாட்டுக் கறியை
                               குழைத்தடித்துவிட்டு
மாலையில் அதிரடி வெடிகளை  வெடித்து
வான வேடிக்கையால்  இரவைப்  பகலாக்கி
 கரங்களில் கவனத்தோடு தீபாவளியை கொண்டாட
               என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஆச்சர்யத்தில் கலங்கரை விளக்கு

 ஆயிரம் காதல்  ஜோடிகளை   தினம் பார்க்கிறேன்
அதில் ஒரு திருமணத் தம்பதி வந்தால் வியக்கிறேன்
                                                               

பச்சை பலகைக்கு டாட்டா






ஜில்லுனு ஒரு பீர்
தீபாவளி அன்றோ கானல்நீரு
எனவே மோர் குடிப்போம்
ஜோரா வெடி வெடிப்போம்

Thursday 31 October 2013

விழித்த விதைகள்





           
சாரலோடு மெல்லியக்காற்று வீச
தூங்குகின்ற விதைகள் துள்ளி எழுந்து
                 வேண்டுகிறது
விழித்துவிட்டேன் இனிதூங்கினால்
            வீடு கட்டிவிடுவான்
என்னைக்கரை சேர்த்து விடு மழையே !                            இல்லை இறந்துவிடுவேன்
            இறையாகும் முன்பே